NKC - இனுடைய ஆலோசனைகள் நம் நாட்டில் உள்ள பெரிய அளவு தேவைகளைப் பூர்த்தியடையும்
வண்ணம் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் NKC பல மாறுபட்ட ஆர்வலர்களுடன் தொடர்புகொண்டு பல கருத்தரங்கையும், பயிற்சிப் பட்டறையையும் மற்றும் பல ஆய்வையும் மேற்கொண்டது. இதில் உள்ள பணிக்குழு மேல்மட்ட அதிகாரிகளுடன் அதிக காலம் கலந்தாய்வு செய்திருக்கிறது. கருத்தரங்கம், பணிப்பட்டைறை மற்றும் கணக்கெடுப்பின் மூலம் தேசிய அறிவுசார் ஆணையம் நாட்டின் அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்திருக்கின்றது.